×

போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் தடுப்பு விழிப்புணர்வு தஞ்சாவூரில் மாநில அளவில் மாரத்தான் போட்டி

*2 ஆயிரம் மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்

தஞ்சாவூர் : போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான மாரத்தான் போட்டி தஞ்சாவூரில் நடைபெற்றது.தஞ்சாவூர் தனியார் அறக்கட்டளை சார்பில், கல்வியே நாட்டின் அரண், போதைப்பொருள் தடுப்பு, சிறுவர் சிறுமியர் பாலியல் தடுப்பு விழிப்புணர்வு குறித்த மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் மாரத்தான் போட்டி அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.

இப்போட்டியை மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.பள்ளி மாணவ, மாணவிகளுக்கு 5 கிலோ மீட்டர் தூரம் ஓட்டம் மற்றும் பொதுப்பிரிவில் ஆண்கள், பெண்களுக்கு 20 கிலோ மீட்டர் ஓட்டம் நடைபெற்றது.

இந்த போட்டியில் வெற்றிபெறுபவர்களுக்கு முதல் பரிசாக ரூபாய் 50,000 மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஓடினர். இந்நிகழ்ச்சியில் தனியார் அறக்கட்டளை நிறுவனர் உலகநாதன் ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார், கௌரவ செயலாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

The post போதைப்பொருள் ஒழிப்பு, பாலியல் தடுப்பு விழிப்புணர்வு தஞ்சாவூரில் மாநில அளவில் மாரத்தான் போட்டி appeared first on Dinakaran.

Tags : Drug Elimination, ,Sexual Prevention Awareness marathon competition ,Thanjavur ,Drug Elimination ,Sexual Prevention Awareness ,Dinakaran ,
× RELATED தஞ்சாவூர் கைவினை கலைப்பொருள்...